தெற்­கா­சி­யாவில் திடீர் விபத்­துக்­களால் உயி­ரி­ழக்கும் சிறு­வர்­களின் தொகை அதி­க­ரிப்பு: யுனிசெப்!

0
473

Siruvarதெற்­கா­சி­யாவில் எதிர்­பா­ராத திடீர் விபத்­துக்­களால் உயி­ரி­ழக்கும் சிறு­வர்­களின் தொகை வரு­டாந்தம் 389,000 வரை அதி­க­ரித்­துள்­ளாக யுனிசெப் அமைப்பின் இலங்­கைக்­கான பிர­தி­நிதி கெரொலின் பெக்கர் தெரி­வித்தார்.
சுகா­தார அமைச்சின் கல்வி பணி­ய­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
சூழல் பாது­காப்பு, எதிர்­பா­ராத விபத்­துக்­க­ளி­லி­ருந்து பாது­காப்பு என்­பன சிறு­வர்­க­ளுக்­கான உரி­மை­க­ளாகும்.வரு­டாந்தம் விபத்­துக் ­களில் மட்டும் 15 வய­துக்­குட்­பட்ட சிறு­வர் கள் மில்­லியன் கணக்கில் உயி­ரி­ழக்­கின்­றனர்.
இது குறித்து பெற்றோர் விழிப்­பு­ணர்­வு டன் செயற்­பட வேண்டும். பெற்­றோரின் அறி­யா­மையின் நிமித்­தமும் பொறுப்­பு­ணர்­வற்ற கார­ணங்­க­ளி­னா­லுமே சிறார்­களின் உயிர்கள் பரி­தா­ப­க­ர­மாக காவு கொள்­ளப்­ப­டு­கின்­றது.
குறிப்­பாக மூச்­சுத்­தி­ணறல்,நீரில் மூழ்­குதல், வீதி விபத்­துக்கள்,எரி­கா­யங்கள்,விலங்­கு­க ளால் தாக்­கப்­படல் போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளினால் சிறு­வர்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.சிறந்த முறையில் அமைக்­கப்­பட்ட தொடர்­பாடல் முறை­யினை பயன்­ப­டுத்­து­வ தன் மூலம் சிறு­வர்­க­ளுக்கு ஏற்­படும் விபத்­துக்­களை தடுக்­கவும் கட்­டுப்­ப­டுத்­தவும் முடி யும். அத்­தோடு முன்­னெச்­ச­ரிக்­கை­களை முன்­னெ­டுக்­கவும் பாது­காப்­பையும் பெற முடியும்.
பொது­வாக சிறு­வர்கள் உடல் அளவு, வளர்ச்சி, அனு­ப­வக்­கு­றைவு, அறி­யாமை போன்ற கார­ணங்­க­ளினால் இல­குவில் காயங்­க­ளுக்­குட்­ப­டு­கின்­றனர். இலங்­கை யில் 5 வய­துக்கு குறைந்த குழந்­தை­களின் மர­ணத்தில் 4 ஆவது பெருங்­கா­ர­ணி­யாக சிறுவர் காயங்கள் அமைந்­துள்­ளன. 2009 ஆம் ஆண்டு சீமாட்டி வைத்­தி­ய­சா­லையின் அறிக்­கையின் படி சிறுவர் மரண வீதம் அதிகரித்துள்ளது. அத்தோடு ஐ.நா. சபையின் சிறுவர் உரிமைகளுக்கான பிரிவு சிறுவர் பாதுகாப்பினையும் சிறுவர் உரிமையாக்கி யுள்ளது. அதன் பிரகாரம் சிறுவர்களை பாது காப்பது சமூகத்தவரின் கடமையாகிறது என் றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here