மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்கியது வீட்டில் இருக்கவே: ராஜித சேனாரத்ன

0
91

Mahinda_rajapaksa_அரசியல் செய் வதற்காக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப் படவில்லை. வீட்டில் ஓய்வாக இருக்கவே பாதுகாப்பு வழங்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

சந்தி, சந்தியாக கூட்டம் போடாமல் வீட்டில் ஓய்வாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது. ஓய்வாக நற்கருமங்களில் ஈடுபடத்தான் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இன்று மாத்தறையில் நடைபெறும் எதிர்க் கட்சி கூட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர்.

ஐ. ம. சு. மு. வின் பெயரை பயன்படுத்தி பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது தவறாகும். கூட்டத்திற்கு ஆட்களை திரட்டவே ஐ. ம. சு. மு.வின் பெயர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதற்கும் ஐ. ம. சு. மு.வுக்கும் தொடர்பு கிடையாது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். ஐ. ம. சு. மு. தலைவர் ஜனாதிபதியே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here