நேற்றைய தினம் 27/09/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 14.00 மணியளவில் தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபனின் 33 வது ஆண்டுகள் நீங்காத நினைவு தினத்தை நெவர் தமிழ்ச் சங்கத்துடன் நெவர் தமிழ்ச்சோலையும் இணைந்து நடத்தியுள்ளனர் . இந்நிகழ்வில் பொதுச்சுடரினை திருமதி சாள்ஸ் மேரி அஞ்சலா அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து திலீபனின் நிழற் படத்திற்கு ஈகைச் சுடரினை திருமதி குமாரவேல் புஸ்பலீனா அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது ஆசிரியர்கள், மாணவர்கள் என ஒவ்வொருவராக திலீபனின் நிழற் படத்திற்கு சுடரினை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் திருஉருவப்படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. பின்னர் திலீபனின் நினைவு சுமந்த எழுச்சி கானம் ஒலிக்கப்பட்டது. இறுதியாக மாலை 16.00 மணியளவில் “தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம் “என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுற்றது.