
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இராணுவத்தினர், காவல்துறையினர் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து சில கடைகளை திறக்கச் செய்துள்ளனர்.
அச்சுவேலி பகுதியில் கடைகளைத் திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் அங்கு சென்ற வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோசுக்கு காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு முன் இராணுவம், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ உயரதிகாரிகள் சொகுசு வாகனங்களில் அப்பகுதியில் பிரசன்னமாயிருந்தனர். சந்தியை சூழவும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.