தடைகளுக்கு எதிராக தமிழர் தாயகமெங்கும் பூரண கதவடைப்பு!

0
168

தமிழர்கள் மீதான ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபத்தை நினைவேந்தும் உரிமை மறுக்கப்பட்டமைக்கெதிராகவும் தமிழர் தாயகத்தில் இன்று பூரண கதவடைப்புப் போராட்டம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

வர்த்தக நிலையங்கள்,அங்காடிகள்,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்புக்கிணங்க அனுஷ்டிக்கப்படும் இன்றைய கதவடைப்புப் போராட்டத்துக்கு அனைத்துத் தமிழ் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது மிகவும் அவசியமாகும். இது அவர்களின் பிரதான கடமையாகும்.”

“தமிழ் மக்களுடைய சுதந்திரமான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல முயற்சிகளை ராஜபக்ச அரசு மேற்கொண்டு வருகின்றது. அரசின் இந்தச் செயல் ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம் இல்லை. இது தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை அவமதிக்கின்ற செயற்பாடாகும்.

இதனால் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழர்களை அவமதிக்கும் ராஜபக்ச அரசின் செயற்பாட்டுக்கு எதிராகவும், தமிழர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தியும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைந்து வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இந்த அழைப்பையேற்று – அந்தக் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கு, கிழக்கில் இன்று பூரண கதவடைப்புப் போராட்டத்துக்குத் தமிழ் மக்கள் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். இது அவர்களது பிரதான கடமையாகும் என்று தமிழ்க்கட்சிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here