நீதிமன்றத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைதானவர்களில் மேலும் 15 பேர் பிணையில் விடுவிப்பு!

0
128

vithija2எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது யாழ் நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 15 பேர் இன்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 47 சந்தேகநபர்கள் இரண்டு பிரிவாக இன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

முதல் பிரிவில் 33 சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதோடு அவர்களில் 12 பேரை தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இரண்டாவது பிரிவின் கீழ் 14 பேர் ஆஜர்படுத்தப்பட்டதோடு அவர்களில் மூவர் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று விடுவிக்கப்பட்ட 15 பேரும் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 32 சந்தேகபர்களையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 18 வயதான மாணவி வித்தியா, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடந்த மாதம் 20 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையில் நீதிமன்ற கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here