போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் எத்தனை பேர் உடலில் செல் துண்டுகளுடன் திரிகிறார்கள்: பேராசிரியர் சிவச்சந்திரன்!

0
113

sivachandranஇலங்கையை பொறுத்தவரையில், 90 வீதமானவர்கள் உண்மையை பேசுவதில்லை.எதனையும் தரவுகள் மூலம் கணக்கெடுப்பது கிடையாது.அண்ணளவாகவே கணித்து கூறுகிறார்கள் என பேராசிரியர் சிவச்சந்திரன் தெரிவித்தார்.

ரில்கோ விடுதியில் இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையில் உண்மை,நியாயம்,நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் பாதிக்கப்பட்ட விதவைகள், காணாமல் போனோர,காணிகளை இழந்தோர் எத்தனை பேர் என தரவுகள் ஒழுங்காக கணிக்கப்படவில்லை.

குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் எத்தனைபேர் உடம்புகளில் செல் துண்டுகளுடன் வன்னிப் பிரதேசங்களில் திரிகிறார்கள் என்பதை கணித்து சரிவரச் சொல்லமுடியுமா? இல்லை.அதிலும் உண்மை என்பது இல்லை. இதுவரையிலும் இலங்கையில் போரால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தொடர்பில் உண்மையான தரவுகளை கணக்கெடுத்து வைத்திருக்கிறார்களா? எவரும் இல்லை.ஆளுக்கால் வித்தியாசமான எண்ணிக்கைளை கணித்து வைத்திருக்கிறார்களே தவிர இவற்றுக்காக தரவுகளை சரிவர கணக்கெடுத்து உண்மையை பேச எவரும் முன்வருவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் இலங்கையில் போருக்குப் பின்னர் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக நியாயமானதும்,உண்மையானதுமான தரவுகள் மூலம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் அவர்களது பிரச்சினைக்குரிய தீர்வு வெகுவிரைவில் கிடைக்க வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here