திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன்இராசையா என்பவர் (நவம்பர் 29, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர்.
இவர் இலங்கை, #யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன்கேணல்_திலீபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமிழர்களுக்காக (நமக்காக) நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.
இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
1987 செப்டெம்பர் 15-ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பை தொடங்கினார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி காரிக்(சனி)கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார்.
தாய்மடி முருகானந்தம்.