திலீபா, பார் – தீபா!
பாரினில் உங்களால்- வரும் மாற்றத்தை,
தாயகத்தில் எழும் மாற்றத்தை,
பார்- திலீபா!
உங்கள் ஈகம்- உலகெங்கும், உரக்கப் பேசும்- நேரம் இது.
” மாற்றம் ஒன்றே மாறாதது”
எதிரியின் குழந்தையும்- உங்கள் ஈகத்தை
புகழ்ந்து பாடும்
நேரம் இது.
எதிரி வீட்டுப் பாவலரின் எழுது கோலும்- உங்கள் ஈ கம் எழுதும்
நேரம் வந்துவிட்டது – திலீபா
எம்மை அழிக்கின்றவன் ,நாட்டிலிருந்து வரும் புயல் கூட
தென்றலாய் பா ஓதும் காலம், வந்துவிட்டது பார்த்தீபா.
கட்சிகளும் ஒன்று சேரும்
மக்களும் ஒன்று சேரும், நாளானது- நீங்கள் உண்ணா நோன்பு இருந்த- இந்த புனித
நாட்கள்.
உங்கள் கனவு நிறைவேறும்,
” மக்கள் புரட்சி வெடிக்கும், தமிழீழம் மலரும்”
அப்போது, உங்கள் பசியும்,தாகமும் தீரும் பார்த்தீபா.
அதுவரை பசியுடன்- நாங்களும் உங்களுடன்.
இளவாலையூர்க் கவி.
(08-21 செப்ரம்பர் 2020 ஈழமுரசில் வந்த கவிதை.)