தமிழீழத்தின் முழுநீளத் திரைப்படமான “எல்லாளன்” படத்தில் வரும் தலைப்புப் பாடலான “தாயக மண்ணே தாயக மண்ணே…” பாடலைப் பாடிய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தி தமிழீழ மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் பல தமிழீழத் தேசியப் பாடல்களைப் பாடியுள்ளார்.
குறிப்பாக கலைபண்பாட்டுக் கழகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளையினால் வெளியிடப்பட்ட “கார்த்திகை 27” இறுவெட்டில் உள்ள “அது யார் அழுகையோ..” பாடலும் எஸ்.பி.அவர்களின் குரலிலே வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல தமிழீழத் தேசியப் பாடல்கள் உள்ளன.
இவருடைய இழப்பு தமிழீழ மக்களுக்கும் பேரிழப்பாகும். இவரது இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
(எரிமலையின் செய்திப் பிரிவு)