தியாக தீபம் நினைவாக செல்வச் சந்நிதியில் உணவு மறுப்புப் போர்!

0
193

தியாக தீபம்’ திலீபனின் நினைவு நாளான 26ம் திகதி யாழ்ப்பாணம் – செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் திலீபனுக்காய் ஒன்றிணைந்துள்ள தமிழ் தேசியக் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு அதிரடியாக தீர்மானித்துள்ளன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தலை தடை செய்யக் கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கில் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இன்று மீளவும் நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 10 தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன. இதன்போது, வரும் “26ம் திகதி தியாகி திலீபனின் நினைவேந்தலை ஆலயங்களில் விசேட பூசைகள் மற்றும் வீடுகளில் இருந்தவாறும் நினைவு கூருமாறு” அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் “அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செல்வச் சந்நிதி ஆலயத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கவும்” அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here