பிரான்சு ஆர்ஜொந்தைப் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாலயப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த (15.09.2020) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகி இன்று (23.09.2020) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு ஒன்பதாவது நாள் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை பிரான்சு மாவீரர் பணிமனையின் துணைப் பொறுப்பாளர் பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைக்க ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து 26.09.2020 சனிக்கிழமை வரை குறித்த நினைவேந்தல் இடம்பெறவுள்ளது. இறுதி நாளான அன்றைய தினம் 14.00 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவான சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை எதிர்வரும் (26.09.2020) சனிக்கிழமை குறித்த பகுதியில் பிரான்சு தமிழ் தமிழ் இளையோர் அமைப்பினர் காலை 9.00 மணிமுதல் மாலை 19.30 மணிவரை அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு –ஊடகப்பிரிவு )