உனது ஏக்கம்
உனது கவலை
உனது வேட்கை
ஒருபோதும்
வீண்போகாது.
விடுதலைப்
போராட்டத்தில்
இழந்தது
எதுவும்
இழப்பில்லை
இது
உலக வரலாற்றில்
விடுதலை
பொன்மொழி.
சொட்டு
கூட
நீர்
அருந்தாமல்
நல்லூர்
முருகன்
பார்க்க
நாநிலமும்
செய்தியறிய
தெய்வீக
தரிசனமாய்
காற்றோடு
கறைந்தவனே!
நீ
விண்ணுலகில்
விடுதலை
பசியோடு
காத்திருப்பதாய்
எம்தமிழ்
கவிஞர்கள்
கவிதை
வாசிக்கிறார்கள்
மண்ணுலகில்
நாங்களும்
அதே
பசியோடுதான்
மெளனித்து
காத்திருக்கிறோம்.
காலமும்
இயற்கையும்
ஓர் நாள்
கை காட்டும்
எம்மினத்தின்
இளம் தலைமுறை
கணக்கு
முடிப்போம்
வரலாறு
திரும்பும்
தமிழினம்
தலை நிமிரும்.
வ. கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
23.09.2020