கிளிநொச்சியில் தொடருந்தில் மோதுண்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி தொடருந்து ஆனந்தபுரம் கிழக்குப் பகுதியில் சென்ற போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை தொடருந்து ஊழியர்கள் கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சம்பவத்தில் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்த வருகின்றனர்.