இந்திய அரசின் ஆதிக்க சதிவலைக்குள் சிக்கித் தவித்த தமிழீழ மீட்பினை தமிழ்மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வருவதற்கு அந்த அரசிடம் பன்னிரெண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணா நோன்பினை ஆரம்பித்து. பன்னிரெண்டு நாட்களின்
பின் உயிர் நீத்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் அரசியல் விழிப்புணர்வை புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் இளையவர் மனங்களில்
நிலைநிறுத்தும் முகமாக அடையாள உணவுமறுப்புப் போராட்டங்களை இளையோர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் பெல்சியம் நாட்டின் தமிழ் இளையோர் அமைப்பினர் எதிர்வரும் 23.09.2020 புதன்கிழமை உணவு மறுப்புப் போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.