தமிழின உரிமை மீட்பில் இது ஒரு வரலாற்றுத் தொடக்கம் – வ.கௌதமன்

0
732

“நீட்” என்கிற எமனால் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலி எடுக்கப்பட்டிருகிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் “நீட்”டை விட பலாயிரம் மடங்கு கொடூரமான ஒரு சட்ட வரைவினை மீண்டும் எங்கள் இனத்தின் மீது வலிந்து திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிற அறிவின் தெளிவோடு ஒரு மாபெரும் இணைய வழி கருத்தரங்கினை “தமிழர் அறம்” தொடங்கி வைக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கருத்தரங்கின் –

முன்னிலை:
மேனாள் துணைவேந்தர்
அம்மா திருமதி வசந்தி தேவி அவர்கள்,

தலைமை:
மேனாள் துணைவேந்தர்
ஐயா திரு.பொற்கோ அவர்கள்,

வரவேற்புரை:
வழக்கறிஞர்
திரு.இராஜன் அவர்கள்,

சட்டவுரை:
மாண்பிற்குரிய முன்னாள் நீதியரசர்
ஐயா திரு. அரிபரந்தாமன் அவர்கள்.

அறவுரைகள்:

மரியாதைக்குரிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அரியானா மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளருமான
ஐயா திரு.தேவசகாயம் அவர்கள்,

“கவிப்பேரரசு” திரு.வைரமுத்து அவர்கள்,

மருத்துவர் திரு.இரவீந்திரநாத் அவர்கள்

இனமான நடிகர்
திரு. சத்யராஜ் அவர்கள்
அறவுரை நிகழ்த்துகிறார்கள்.

நன்றியுரை :
மருத்துவர் லட்சுமண மூர்த்தி அவர்களும்

இந்நிகழ்வின் நெறியாளராக
(வ.கெளதமன்) நானும் பொறுப்பேற்றிருக்கிறோம்.

ஒரு இனம் கல்வியை இழந்தால் வேலைகள் பறிபோகும். வேலைகள் பறிபோனால் வாழ்வியலை இழக்க நேரிடும். இறுதியில் அந்த இனம் வரலாறற்று அநாதையாக திரிந்து அழிந்து போகும்.

ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த பூமிப்பந்தின் மூத்த குடியான நாங்கள் ஒரு போதும் எங்கள் உரிமைகளை விட்டுத்தரவே மாட்டோம். அறிவின் கூர்மையோடும் சட்ட நெறிமுறைகளோடும் எங்கள் தமிழினத்தின் பேராளுமைகள் எடுத்து வைக்கின்ற பேருண்மையின் கூறுகளை இந்திய ஒன்றிய அதிகாரவர்க்கமும் தமிழக அரசும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். தவிர்த்து மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாற்றப்பட்டு எங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டால் ஒருபோதும் தமிழினத்தின் இளைய தலைமுறைகளான நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்.

இந்த இணையவழி கருத்தரங்கினை உலகம் முழுக்க இருக்கின்ற தமிழ் தொலைக்காட்சிகளும் மற்றும் இணையத்தின் வளைதள காட்சி ஊடகங்களும் நேரலையாக ஒளிபரப்ப இருக்கின்றன. அதனை பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்நிகழ்வு
20.09.2020
வரும் ஞாயிறு
மாலை 5 மணிக்கு
நடைபெறும்.

ஒன்றாக கை கோர்ப்போம்.
உறுதியுடன் போராடுவோம்.
உரிமைகளை வென்றெடுப்போம்.

பெரும் நம்பிக்கையோடு,
வ. கௌதமன்
தமிழர் அறம்,
“சோழன் குடில்”
18.09.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here