யாழ். நீதிமன்றத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைதானவர்களில் 34 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்களை தலா இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் யாழ். பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணிமுதல் 12 மணிக்குள் கையொப்பம் இட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் அடுத்தமாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
புங்குடுதீவில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து கடந்த மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 135 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவர்களில் 06 பாடசாலை மாணவர்கள் கடந்த வாரம் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், ஏனையவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.