பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் நாளை உணவுமறுப்புப் போராட்டம்!

0
541

இந்திய அரசிடம் ஐந்து  அம்சக் கோரிக்கையை முன்வைத்து நீர் கூட அருந்தாது பன்னிருநாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ”தீயாக தீபம் திலீபனின்  33ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இனவாத அரசினால் தடைவிதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் இரு நாட்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

நாளை 19.09.2020 சனிக்கிழமை மற்றும் 26.09.2020 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 19.30 வரை பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ஜொந்தை தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபி முன்பாக 12 மணிநேரம் குறித்த அடையாள உண்ணா விரதம் இடம்பெறவுள்ளது.

குறித்த இருநாள் உண்ணாவிரத நிகழ்வில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினருடன் ஆர்ஜொந்தை, கொலம், சேர்ஜி, கிளிச்சி, செவ்றோன், ஸ்ரார்ஸ்பேர்க், செல் ஆகிய பகுதிகளின் இளையோர் அமைப்பினரும் இணைந்துகொள்ளவுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று 15.09.2020இல் இருந்து  26.09.2020வரை தினமும் காலை 10 மணிக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

இடம்:-PARC DU CERISIER Rue Des            ALLOBROGES
95100 ARGENTEUIL
(Gare val d’Argenteuil இல் இருந்து பேருந்து இல: 8 ,164 தரிப்பிடம் collège Claude monet)

இதேவேளை தியாக தீபம் திலீபனின் இறுதி வணக்க நிகழ்வும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கேணல் சங்கர் அவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் 26.09.2020 (சனிக்கிழமை) பிற்பகல் 14.00மணிக்கு குறித்த பகுதியில் இடம்பெறவுள்ளது.

அனைவரையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பு:-இம்முறை கோவிட் 19 நுண்கிருமித் தொற்றுக் காரணமாக அஞ்சலி செலுத்த வரும் அனைத்து உறவுகளும் முகக்கவசம் அணிந்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:-
-0662683215
,0651230811(ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கம்)
-0658242099(ஆர்ஜொந்தை இளையோர் அமைப்பு)

  • 06 95 94 69 68
    (மாவீரர் பணிமனை -பிரான்சு )

மேலதிக தொடர்புகளுக்கு:-
-0143150421(cctf)

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்பு குழு-பிரான்சு – ஊடகப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here