தியாக தீபத்தை நினைவேந்திக் கைதான சிவாஜிலிங்கம் நீதிமன்றில்!

0
181

தடையை மீறித் தியாக தீபம் திலீபனின் நினைவேந்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினம் நேற்று பல தடைகளையும் தாண்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் நினைவுகூரப்பட்டது.

தியாகதீபம் திலீபனின் நினைவுதினத்தில் நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவுகள் காவல்துறையினரால் நீதிமன்றத்தின் ஊடாக எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம்,யாழ் பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திலீபனின் நினைவு தினம் தடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நினைவேந்தினார்.

இதானல் கோப்பாய் காவல்துறை கைது செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவாக ஆஜராக மணிவண்ணனுக்கு நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆட்சேபனை தெரிவித்தபோதும் மணிவண்ணன் வழக்கில் ஆஜரானார் . இந்த வழக்கில் முத்த சட்டத்தரணிகள் சிறிகாந்தா, சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமாரன் அகியோர் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here