கடந்த 15.09.1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் விமானத்தாக்குதலின் போது உயிர்நீத்த 24அப்பாவி பொதுமக்களின் 21ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வை மேற்க்கொள்ள பல தடைகள் மேற்க்கொண்ட போதும் 15.09.2020 இன்று காலை 9.35 மணிக்கு மந்துவில் சந்தியில் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் இணைப்பாளர் ச.ரூபன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நினைவு நிகழ்வில் பொதுச்சுடரினை உயிர்நீத்தவர்களான செ.ஆறுமுகம் க.யோகராசா அவர்களின் உறவினரான யோ.சாந்தராணி அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை உயிர்நீத்த மக்களின் உறவினர்கள் ஏற்றிவைத்தனர். இந்நினைவு நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான திரு. இ.சத்தியசீலன் கௌரவ உறுப்பினர் திருமதி நிசாந்தினி ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் திரு க.சிவலிங்கம் முன்னாள் புதுக்குடியிருப்பு வணிகர்சங்கத்தின் தலைவர் செல்வச்சந்திரன் தெ.ப.பொ.கூட்டுறவுச்சங்கத்தின் முல்லைமாவட்ட சமாசத்தின் பொதுமுகாமையாளர் திரு அருள் ஆகியோர் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தைத் தொடர்ந்து நினைவுரைகளை சமூக செயற்பாட்டாளர் திரு த.யோகேஸ்வரன் (ஈசன்) ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் சுடரேற்றி மலர்வணக்கம் செலத்தினர். இன்றைய நினைவு நிகழ்வில் பல தடைகளுக்கு மத்தியிலும் எம்மோடு இணைந்து உறவுகளின் நினைவு நிகழ்வை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் எமது நன்றிகள் குறிப்பாக கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களான இ.சத்தியசீலன், திருமதி நிசாந்தினி , சமுக செயற்பாட்டாளர் த.ஈசன் ஓய்வு பெற்ற அதிபர் க.சிவலிங்கம் ஆகியோருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.