அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் உந்துருளி – பேருந்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதால் இளைஞன் ஒருவர் பலியானதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்
நானு ஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட வின்டிகோனர் பகுதியிலே இன்று 15/09 மதியம் 12.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
நோர்வூட் பகுதியிலிருந்து நுவரெலியா சென்ற உந்துருளி முந்திச் செல்ல முற்பட்டபோது நுவரெலியாவிலிருந்து அட்டன் நோக்கி வந்த இ.போ.ச பேருந்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர தெரிவித்தனர்.
விபத்தில் நோர்வூட் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய செல்வகுமார் ராஜ் என்ற இளைஞனே பலியாகியுள்ளார். பேருந்தின் சாரதி நானுஓயா காவல்துறையினரால் கைது செய்துசெய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொள்கின்றனர்.
தகவல் : சதீஷ்