யாழில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய மனைவி மற்றும் பிள்ளைகள்!

0
118

தந்தையின் விருப்பத்துக்கு அமைய அவர் உயிரிழந்த நிலையில் அவரது உடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தையா சிவானந்தவேல் (வயது-73) என்ற முதியவரின் சடலமே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்க மல்லாகம் நீதிமன்றம் அனுமதியளித்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக தான் இறந்த பின்னர் தனது உடலை வழங்குமாறு மனைவி மற்றும் பிள்ளைகளிடம் உயிருடன் இருக்கும் போது விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் காலமானார். அவரது உடல் தெல்லிப்பழை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் பலாலி பொலிஸார் ஊடாக மனைவி மற்றும் பிள்ளைகள் தமது விண்ணப்பத்தை முன்வைத்தனர்.

அவர்களது விண்ணப்பத்தை ஆராய்ந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா, உயிரிழந்தவரின் உடலை மனைவி மற்றும் பிள்ளைகளின் ஒப்புதலுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒப்படைக்க அனுமதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here