வீட்டினுள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் வீட்டை சேதப்படுத்தியதோடு, மேற்கொண்ட வாள் வெட்டில் குடும்பப் பெண் படுகாயமடைந்துள்ள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு (12.09.2020) 9.00 மணியளவில் யாழ்.தென்மராட்சி மீசாலை வடக்கு – வவா கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாள் வெட்டில் படுகாயமடைந்த 40 வயது குடும்பப் பெண்ணான ஸ்ரீதரன் பவானி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.