மலேசியாவில் படுகொலைசெய்யப்பட்ட நபரின் சடலத்தை இலங்கைக்குத் தருவிக்க மனைவி கோரிக்கை!

0
326


மலேசியா நகரில் கடந்த 6ம்திகதி மலேசியா இளைஞர்கள் சிலரால் அடித்துக் கொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு கிண்ணையடியைச்சேர்ந்த தனது கணவரின் சடலத்தை தன்னிடம் தருவித்துத்தருமாறு இறந்தவரின் மனைவி கோரிக்கைவிடுத்துள்ளார்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:- முன்னாள்போராளியான கிண்ணையடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை விவேகானந்தன் (37) UNHCR ஊடாக தஞ்சம்கோரி கடந்த எட்டு ஆண்டுகளாக மலேசியாவில் வசித்துவந்துள்ளார்.

இத்தருணத்தில் கடந்த 3ம்திகதி அதிகாலை 2மணியளவில் சில மலேசிய இளைஞர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடுதிரும்பிய நிலையில் கடந்த 6ம் திகதி மரணமடைந்துள்ளார்.

இவர் கடந்த எட்டுவருடங்களாக மலேசியாவில் ஜோகூர் மாசை எனுமிடத்தில் உணவகமொன்றில் பணிபுரிந்துவந்துள்ளார்.
இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே இவ்மரணம் ஏற்பட்டுள்ளது.இவ்மரணம் தொடர்பாக மலேசிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைப் பிரஜையான விவேகானந்தனின் கொலை தொடர்பாக காாவல்துறையினர் விசாரணைகளை நடாத்தவேண்டுமென மலேசிய உலகமனிதநேய இயக்கத் தலைவர் டி.கமலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பாக செந்தூல் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருப்பதாக கமலநாதன் தெரிவித்தார்.பிரதபரிசோதனையில் தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கமலநாதன் மேலும் தெரிவித்தார்.
தற்போது செங்கலடி சந்தைவீதியில் வசிக்கும் இறந்தவரின் மனைவி பிருந்தாஜினி எம்மிடம் தெரிவிக்கையில்தான் இச்சம்பவம் தொடர்பாக UNHCR இல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தனது கணவரின் பூதவுடல் தனக்குத்தேவையென்றும் தனது 10வயது மகன் அப்பா இன்னும் உயிருடன் இருக்கின்றார் என நம்பிக்கைகொண்டுள்ளதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கைத் தூதரகம் சடலத்தை பெற்றுத்தருவதாகவும் மலேசியாவில் உள்ள சில தன்னார்வ நிறுவனங்களும் தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.
தனக்கு எப்படியாவது தனது கணவரின் உடல் தேவையென மேலும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here