
8 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது Attert மாநகரசபையின் முதல்வர்,பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை சந்தித்து ஒரு மணித்தியாலம் தமிழீழ மக்களின் நிரந்தர தீர்வுபற்றிய கலந்துரையாடல் நடைபெற்று தொடர்சியாக இன்று Arlon மாநகரசபையை வந்தடைந்தது.
மாநகர முதல்வர் மனித நேய அறவழி பயணிகளை வரவேற்று குளிர்,சுடு பானம் கொடுத்து. எமது கோரிக்கைக்கு அரச மட்டங்களில் அழுத்தம் கொடுப்பதாகவும்,
இன்று உலகில் உள்ள ஆபத்தான காலத்திலும் இந்த நீதிக்கான போராட்டத்தைப் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்து வழி அனுப்பி வைத்தர்.
பல இன்னல்கள் வந்தபோதும் இயற்கையும் மாவீரர்களும் எங்களுக்குத் துணை நின்று இந்த நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பணத்தை வழிப்படுத்தி செல்ல உறுதுணை நின்றனர்.
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”