இலங்கையிலிருந்து பாதுகாப்பு தேடி மலேசிய UNHCR இல் தஞ்சம் கோரி கடந்த 12 ஆண்டுகளாக மலேசியாவில் வாழ்ந்து வந்த ஒரு குழந்தையின் தந்தையான கணபதிப்பிள்ளை விவேகானந்தன (வயது 37) என்ற குடும்பஸ்தர் கடந்த 03.09.2020 அன்று அதிகாலை 2 மணியளவில் சிலரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையின் பின்னர் வீடு சென்ற நிலையில் கடந்த 06.09.2020 அன்று நண்பகல் உயிரிழந்துள்ளார் . இச் சம்பவம் தொடர்பில் மலேசியக் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
இதுதொடர்பில் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளசாவது:-
பல துன்பியல் சம்பவங்களைக் கடந்து பலர் எதிர் காலம் குறித்த ஏக்கத்துடன் மலேசிய UNHCR இல் பதிவு செய்து ஒரு நிரந்தரத் தீர்வின்றி பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து நீண்ட நாட்களாக வாழ்ந்து வருகின்றனர் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
இலங்கையில் கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர்மலேசியா நாட்டில் வைத்து அந்த நாட்டை சேர்ந்தவர்கள் அடித்துகொலை செய்து இருக்கிறார்கள்.
இவர் சுமார் 12ஆண்டுகளாக மலேசியாவில் ஜோகூர் மாசை எனும் இடத்தில் சாதாரண உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். மலேசிய தமிழ் உறவுகளே ஒரு மனிதாபம் அற்ற செயலை செய்துள்ளார்கள். இரண்டு மலேசியத் தமிழர்கள் இவரை அடித்துக் கொலை செய்யும் அளவிற்கு இவர் செய்த தவறு என்ன? தயவு செய்து இவருக்குரிய நீதியைப் பெற்றுத்தாருங்கள். தனது அப்பா எங்கே என அழுதுகொண்டிருக்கும் குழந்தைக்கு மலேசியா அரசு என்ன செய்யப்போகிறது? கணவன் வீடுதிரும்புவார் என்ற மனைவியின் எதிர்பார்ப்பு கலைந்துவிட்டது. தமிழ் இனத்துக்காகத் தமிழ் மண்ணுக்காகப் போராடிய ஒரு மா மனிதரை கொன்று விடடார்கள். ஊடகங்களும் மௌனம் சாதிக்கிறது. அன்பான மலேசியத் தமிழ் உறவுகளே! இவருக்குரிய நீதி கிடைக்கும் வரை பகிருங்கள். இவரது உடலானது இதுவரைக்கும் மருத்துவ மனையில்தான் உள்ளது. தமிழ் மீது உணர்வுள்ள தமிழ் உறவுகளே! நீதிக்காக குரல் கொடுங்கள்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.