ஓமந்தையில் குளவிக் கொட்டு: 3 வயது சிறுமி பலி; 3 மாத குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்!

0
377

ஓமந்தை – நொச்சிமோட்டை கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குளவி கொட்டுக்கு இலக்கான 3 வயது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமது விவசாய காணியை துப்புரவு செய்வதற்காக 61 வயதான தாய் மற்றும் 36 வயதான மகள் மற்றும் பேரபிள்ளைகள் இருவமாக 4 பேரும் சென்றிருந்த நிலையில் சுத்தம் செய்வதற்காக வெட்டிய மரத்திலிருந்த குளவி கூட கலைந்து கொட்டிய நிலையில் அயலவர்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுமி நேற்று உயிரிழந்துள்ள நிலையில் தாய், மகள் மற்றும் 3 மாத குழந்தை ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here