6 ஆம் நாளில் பெல்சியம் நாட்டில் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்!

0
587

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 6ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் இடம்பெறுகின்றது. நேற்று 5 ஆம் நாள் பெல்சியம் நாட்டின் வேத்தலோ எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும் பாதைகளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனுக்கள் அரசியற் சந்திப்பின் ஊடாக கையளிக்கப்பட்டது .

அத்தோடு நமூர் மாநகர சபையிலும் மனு கையளிக்கப்பட்டு தொடர்ச்சியாக பெல்சிய நாட்டில் பயணித்துக் கொண்டு இருக்கின்றது. மழை மற்றும் புவியியல் சவால்களுக்கு மத்தியில் தமிழர்களுக்கே உரித்தான விடுதலை ஓர்மத்தோடு மனித நேயப்போராளிகள் பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

அத்தோடு செல்லும் பாதைகளில் சந்திக்கும் பல்லின மக்கள் மத்தியிலும் தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட இனவழிப்பு பற்றியும் , அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழர்களுக்கு தமிழீழமே தீர்வு .. மற்றும் பல கோரிக்கைகளையும் விழிப்புணர்வூட்டி வருகின்றார்கள். நாளை மீண்டும் தொடர இருக்கும் ஈருருளிப் பயணத்திற்கு மாவீரரே துணை நின்று இயற்கையும் வழி காட்டும் எனும் நம்பிக்கையில் வரும் 21/09/2020 அன்று ஐ.நா முன்றலில் பி.ப 2 மணிக்கு நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு பேரணி நோக்கி விரைகின்றது.

தமிழினத்திற்கு நீதி கேட்டு அனைத்து தமிழ் உறவுகளையும் நடக்க இருக்கும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here