உலகில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. ஆக.,ல் கொரோனாதொற்று பெருமளவில் பாதித்துள்ளன. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்புகளில், கடந்த ஆகஸ்டில் 2 மில்லியன் நோய் தொற்று பதிவாகியுள்ளது.
இது நாட்டின் பாதிப்புகளில் 54 சதவீதமாகும். ஆக., (ஒரே மாதத்தில்) மட்டும் 19,87,705 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் நோய் தொற்று அதிகமாக பரவியுள்ளது. நேற்று முன்தினம் (ஆக.,30) ம் தேதி இதன் விகிதம் 45.7 சதவீதமாகவும், இறப்பு விகிதத்தில் 50 % ஆக உள்ளன. மஹா.,வில் மட்டும் கிட்டத்தட்ட 21% பாதிப்பு மற்றும் 30% க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலமும் 20% மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் பாதிப்பு விகிதத்தை பதிவு செய்து வருகிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் பதிவு செய்யப் பட்ட 78,512 பாதிப்புகளில் 70 சதவீதம் இந்த 7 மாநிலங்களில் இருந்து தான் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.