பிரான்சில் சோதியா கலைக்கல்லூரியின் புதிய கல்வி ஆண்டிற்கான (2020/2021) வகுப்புகள் யாவும் (புதன்,சனி,ஞாயிறு) இந்த வாரம் கோவிட் 19 சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஆரம்பமாகவுள்ளதாக சோதியா கலைக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான சந்திப்பொன்று நேற்று 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை சோதியா கலைக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்புதிய கல்வி ஆண்டில் ஆசிரியர்,மாணவர்கள்,பெற்றோர்கள் இடையே இணையவழித் தொடர்பாடல்களைப் பேணும் நடவடிக்கைகளை சமூக இணையங்களின் வாயிலாக ஆரம்பிக்கும் புதிய முயற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக சோதியா கலைக்கல்லூரியின் இளையோர்கள் எமது ஊடகப்பிரிவினரிடம் தெரிவித்தனர்.
புதிய வகுப்புகள் ஆரம்பமாவது தொடர்பாக சோதியா கலைக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு:-
புதிய ஆண்டிற்கான அனைத்து வகுப்புகளும் எதிர்வரும் 02.09.2020 (புதன்கிழமை) அன்றிலிருந்து வழமைபோல் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது பாடசாலை சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்பதையும் அறியத் தருகின்றோம்.
• ஆசிரியர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள், 11 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயம்
• பள்ளி வாசலில் sanitizer வைக்கப்பட்டிருக்கும்
• பாடசாலைக்கு வரும் எல்லா நபரின் உடல் வெப்பநிலை பார்த்த பின்னரே, பாடசாலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்
• சமூக இடைவெளியை முயன்ற அளவில் கடைபிடிக்க வேண்டும்.
இவ்விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, இப்புதிய கல்வியாண்டு சிறப்பாக அமைய, அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகின்றோம்.
சோதியா கலைக்கல்லூரி நிர்வாகம்
Information importante
Les cours de cette année scolaire reprennent à partir du Mercredi 02 Septembre 2020, aux horaires habituelles.
Compte tenu de la situation sanitaire actuelle du pays, notre école rouvrira selon le protocole sanitaire prévu par le gouvernement :
- Port du masque obligatoire pour tous
- Mise à disposition de gel hydroalcoolique à l’entrée
- Prise de température de toutes personnes entrants dans l’école
- Respect de la distanciation sociale dans la mesure du possible.
Pour la sécurité de tous et pour une année scolaire meilleure, nous comptons sur chacun d’entre vous pour le respect de ces règles.
La direction de Sothiya Kalaikalloori
(எரிமலையின் செய்திப் பிரிவு)