சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று மாபெரும் போராட்டம்!

0
376

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் வாழும் தேசங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறிய வும் அவர்களுக்கான நீதியை வேண்டியும் அவர்களது உறவுகளால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட வுள்ளதுடன், குறித்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளிலும் கவனயீயர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய போராட்டம் அவர்களது உறவுகளால் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை அரசு மற்றும் சர்வதேசத்திடம் நீதி கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமையாழ்மாவட்டத்தில் காலை 10 மணிக்கு யாழ். பிரதான பேருந்து நிலையமுன்றலில் ஆரம்பிக்கும் போராட்டம் பேரணியாக யாழ் மாவட்டச்செயலகம் வரை செல்லவுள்ளது. , கிழக்கு மாவட்டத்தில் காலை 10 மணிக்கு கல்லடி பாலத்தில் ஆரம்பிக்கும் போராட்டம் பேரணியாக காந்தி பூங்காவரை செல்லவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்னெடுத்துள்ளது.

இதேவேளை நல்லூர் சங்கிலியன் பூங்கா முன்றலிலும் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாவும் அறிய முடிகிறது.

இப் போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு தமது போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here