இலங்கையில் நேற்று முன்தினம் முதல் சூரிய உச்சமடைய ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 11 நாட்களுக்கு சூரியன் உச்சம் கொடுப்பதன் காரணமாக வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று முன் தினம் முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கே சூரியன் உச்சம் கொடுத்தது.
நேற்றைய தினம் முல்லைத்தீவு மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுத்துள்ளது.
வடக்கில் ஆரம்பமாகிய சூரிய உச்சம் எதிர்வரும் 7ஆம் திகதி வரை நாடு முழுவதும் பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுப்பதனால் நாட்டின் பல பிரதேசங்களில் அதிக வெப்பமாக நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.