பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மகிந்த திருப்பதி விஜயம் : தமிழகம் எங்கும் கடும் எதிர்ப்பு !

0
239

mahinthaaமகிந்த ராஜபக்ச வழிபாட்டுக்கென திருப்பதி செல்லும் நிலையில் தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.    மகிந்த ராஜபக்ச திருப்பதி வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை, தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட திரண்டு வந்தவேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர், ராஜபக்சவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.    இதனிடையே மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை காலை திருப்பதியில், தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கப்படவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.    ரேணிகுண்டாவிலிருந்து திருப்பதி மலை அடிவாரம் வரை 200 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே திருப்பதி சேர்ந்துள்ளார் ராஜபக்ச. இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் ரேனிகுண்டா வந்திறங்கிய ராஜபக்ச, அங்கிருந்து தனி விமானம் மூலம் திருப்பதி சென்றார்.

ராஜபக்ச வருகையை ஒட்டி திருப்பதி முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மலைப்பாதைகள், வராக சுவாமி கோயில், தங்க ரதம் இருக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களிலும் வாகன தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற பிரார்த்தனை செய்வதற்காக ராஜபக்ச திருப்பதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று இரவு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை நடத்தும் ராஜபக்ச, நாளை காலை 9 மணி அளவில் திருப்பதியில் இருந்து கிளம்ப உள்ளதாகத் தெரிகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராஜபக்சேவின் வருகையால் திருப்பதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here