கிளியில் மண்மேடு சரிந்து இளம் குடும்பஸ்தர் பலி!

0
167

கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் நேற்று (28) வெள்ளிக்கிழமை காலை பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மண் மேடு சரிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பிரமந்தனாறு – விசுவமடு சந்தியை இணைக்கும் வீதியில் புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருகின்றது.

பாலத்தின் கட்டுமான பணிகள் இடம்பெற்று கொண்டிருக்கையில் கொங்கிரீட் இடுவதற்காக குறித்த குடும்பஸ்தர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது மண் மேடு சரிந்து விழுந்ததில் கம்பிக்குள் சிக்குண்டு குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 1ம் யூனிற் தர்மபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த இராசலிங்கம் சசிதரன் (36-வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது பணியாளருக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படவில்லை என்றும் கட்டுமான பணிகளை முன்னெடுத்துவரும் தனியார் நிறுவனம் பொறுப்புடன் செயற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here