யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட அம்பனைப் பகுதியில் வீடு ஒன்றில் கட்டட வேலையில் ஈடுபட்ட கட்டட கூலித் தொழிலாளி ஒருவர் கூரைத் தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்புக் கூரை விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் நவாலி கலையரசி ஒழுங்கையைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.