
மட்டக்களப்பு – வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள வாகனேரியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா விடுதி வாகனேரியைச் சேர்ந்த நா.ததுஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன், வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டதன் பின்னர் தமது வீடு நோக்கி உந்துருளியில் பயணித்த போது உந்துருளி வேகக் கட்டுப்பாட்டினை மீறி பாதையை விட்டு விலகியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்வரும் விடயங்களைக் கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
01 பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல்.
02 விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்குதல்.
03 மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டல்.