பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ் மொழிப் பொதுத்தேர்வு 2015

0
232

தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் 06.06.2015 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது .

பாரிசையும் பாரிசைச் சுற்றியுள்ள (ile de france) மாணவர்களுக்கான தேர்வு வழமைபோன்று Maison des examens 7 Rue Ernest Renan 94110 Arcueil என்ற முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரான்சில் இம்முறை மொத்தம் 5192 மாணவர்கள் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.

பாரிசில் 4965 மாணவர்களும் பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் 227 மாணவர்களும் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.
பிரான்சின் ஏனைய 7 பிற மாவட்டங்களிலும் தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்வு நிலையங்களில் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு நடைபெற்றது.
ஸ்ராஸ்பேர்க், நீஸ், துலுஸ், தூர், மூல்கவுஸ், றென், போ ஆகிய 7 பிற மாவட்டங்களிலே தமிழ் மொழிப் பொதுத்தேர்வு இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. பெற்றோர்கள் கடும் வெய்யிலுக்கு மத்தியில் காத்திருந்த காட்சி தமது பிள்ளைகள் தமிழ்மொழியைக் கற்கவேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தைக் காட்டியது.

ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

IMG_0059
IMG_7641
IMG_7472

IMG_7496

IMG_7499

IMG_7505

IMG_7508

IMG_7521

IMG_7523

IMG_7526

IMG_7529

IMG_7532

IMG_7533

IMG_7534

IMG_7535

IMG_7536

IMG_7546

IMG_7549

IMG_7556

IMG_7560

IMG_7586

IMG_7587

IMG_7604

IMG_7646

IMG_7539

IMG_7541

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here