
யாழ்ப்பாணம் – நல்லூரில் நேற்று (18) செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த தீர்த்தத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டில் ஈடுபட்டமை தொடர்பில் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து வந்த கணவன், மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 2 தங்கச் சங்கிலிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இதேவேளை, திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவிலும் தாலிக்கொடி, சங்கிலிகள் என பெரும் எண்ணிக்கையிலான நகைகள் பறிபோயுள்ளன என காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.