சிறப்பாக இடம்பெற்ற நல்லைக் கந்தன் தேர்த்திருவிழா!

0
647

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவ இரதோற்சவப் பெருவிழா இன்று 17.08.2020 திங்கட்கிழமை அதிகாலை ஆரம்பமாகி நிறைழடைந்தது.


ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக ஸ்ரீ சண்முகப்பெருமானாக எழுந்தருளி பெருந்தேரில் அழகாக வலம் வந்த காட்சியை பெரும் எண்ணிக்கையில் அடியவர்கள் தரிசித்தனர்.

அடியவர்களின் வசதி கருதி இன்று பிற்பகல் 2 மணிவரை சண்முகப்பெருமானை தரிசிக்க முடியும் என ஆலய தர்மகர்த்தா கூறியுள்ளார்.

கொரோனா சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக இம்முறை நல்லைக் கந்தன் தேரேறுவானா என்கிற பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் ஏக்கத்திற்கான முடிவாக கந்தப் பெருமான் தேரேறி சிறப்பாக வலம் வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here