முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்!

0
560

16.08.1994 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை கடற்பரப்பில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையினரின் A 516 “கட்டளைக் கண்காணிப்புக் கப்பல்” மற்றும் அதிவேக “டோறா” பீரங்கிக் கலம் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

எட்டரை மணிநேரத்தில் சுமார் 35 கி.மீட்டர்கள் தூரத்தை நீந்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கடற்கரும்புலி அங்கயற்கண்ணி சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள் தாக்கி மூழ்கடித்து கடலன்னை மடியில் வரலாறாகி உறங்குகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here