யேர்மனியிலும் தமிழ்மொழிக்கான பொதுத்தேர்வு சிறப்பாக நடைபெற்றது!

0
206

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளின் தாய்மொழி, தமிழ்ப்பாண்பாடுகளை வளர்க்கும் உயர்ந்த இலக்கைக் கடைப்பிடித்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பணியாற்றிவருகின்றது தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி. நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயம் என்ற பள்ளிகளை அமைத்து அங்கே 6000 க்கும் மேற்பட்ட தமிழ்ப் பிள்ளைகளுக்கு வார விடுமுறைகளில் ஆரம்பநிலை தொடக்கம் 12 ஆம் ஆண்டுவரை தமிழ் கற்பித்து வருகின்றது. ஐரோப்பா மட்டத்திலுள்ள தமிழ்க் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான பாடநூல்கள், ஆசிரியப் பயிற்சிகளை வழங்கிவரும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஆண்டுதோறும் அனைத்துலகப் பொதுத் தேர்வை நடாத்திவருகின்றது. அவ் அனைத்துலகத் தேர்வில் இன்று 06.06.2015 சனிக்கிழமை யேர்மனியிலுள்ள 5370 மாணவர்கள் தேர்வெழுதுகின்றார்கள். நாடு முழுவதிலும் 70 விசேடமான தேர்வு நிலையங்கள் அமைக்கப்பட்டு 565 க்கும் அதிகமான தேர்வு மேற்பார்வையாளர்கள் சிறப்பாக ஒருங்கு செய்யப்பட்ட நிலையில் தேர்வு திட்டமிட்டபடி 11:00 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழாலயங்களின் மாணவர்கள் தமிழ்க் கல்விக் கழகத்தின் சீருடையணிந்து தமது பெற்றோர்களுடன் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வுநிலையங்களை நோக்கி அணியணியாகப் பட்டாம்பூச்சிகள் படையெடுத்து வந்ததுபோல் வருகின்ற கண்கொள்ளாக் காட்சிகள் இனி தமிழ் மெல்லச் சாகும் என்று சகுணிப்பவர்களுக்கு விழுந்த சவாலாக அமைந்தது.

விடைத்தாள்களை இன்று பிற்பகல் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மீண்டும் பொறுப்பெற்று அடுத்தபடியான செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

நன்றி
தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி

jerman 1

jerman 2

jerman 3

jerman 4

jerman 5

jerman 6

jerman 7

jerman 8

jerman 9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here