பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 14 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நாளை 14.08.2020 சனிக்கிழமை Place de la Republique பகுதியில் பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது..
வருடங்கள் 14 உருண்டோடிவிட்டன. இன்று இவர்கள் இருப்பாராகில் ஒரு வைத்தியராகவும், அரசியல்வாதியாகவும், மருத்துவத் தாதியாகவும், விமானஓட்டியாகவும், அரச அதிகாரியாகவும், சிறந்த குடும்பத் தலைவியாகவும் , பெயர் தரும் பெண்களாகவும் இருந்திருப்பார்கள். 53 எம் தாய்த்தெய்வங்கள் சின்னாபின்னமாக சிதறிப்போனார்கள். இன்றும் பெற்றவர்கள் வேதனையால் உருக்குலைந்து போனார்கள். இதையெல்லாம் வந்த அரசியல்வாதிகள் எவ்வளவு தூரம் அறிந்து கொள்வார்கள், உணர்ந்து கொள்வார்கள். கண்கண்ட இவற்றை மறந்து எவ்வாறு கடந்து போகப்போகின்றோம். இருக்கும் வரை ஒளியேற்றி கண்ணீர்துளிகளை காணிக்கையாக்குவோம். வாரீர்!