கடந்த பத்து வருடங்களாக தமிழ் தேசிய கொள்கையினை விட்டு விலகாது ஒரே பாதையினில் தடம் புரளாது பற்றுறுதியுடன் இன்று வரை பயணித்துக் கொண்டிருப்பவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரே என முன்னணியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான சுகாஷ் கனகரட்ணம் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை(02.08.2020) அன்று பருத்தித்துறை துறைமுகம் அருகில் ஒழுங்க மைக்கப்பட்டிருந்த இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தினை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் உலகத் தமிழர்களிடமும் ஈழத் தமிழர்களிடமும் ஒரு உருக்கமான வேண்டுகோளினை விடுத்திருந்தார் .
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
இம்முறை நீங்கள் அளிக்கும் வாக்குகள் தான் இந்த இனத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது .எனவே நீங்கள் சிங்களப் பேரினவாத கட்சிகளுக்கோ அல்லது சுயேச்சைக் குழுக்களுக்கோ அல்லது போலித் தமிழ்த் தேசியம் பேசுபவர்களுக்கோ இம்முறை வாக்குகளை அளிக்காது தமிழ் தேசியக் கொள்கை உடன் ஒரு இனத்துக்காக பயணிக்கின்ற எங்களுக்கு தயவுசெய்து வாக்களியுங்கள்.
நாங்கள் உழைப்பதற்காகவோ அல்லது சொத்து சேர்ப்பதற்காகவோ இந்த அரசியலுக்கு வரவில்லை.
நான் ஒரு சட்டத்தரணி நான் இங்கு அரசியலுக்கு வந்த காரணம் இனத்தையும் மண்ணையும் உரிமையையும் பாதுகாக்க.
இங்குள்ள பெரும்பாலான தமிழ் மக்களின் காணிகளுக்கு உறுதி எழுதிக் கொண்டிருப்பவன் நான். எனது அறிவு சொல்லுகின்றது இனிவரும் இந்த ஐந்து வருடத்தில் தமிழருக்கு எழுதிக் கொண்டிருக்கின்ற உறுதியை விட சிங்கள மக்களுக்கு எழுதுகின்ற உறுதியே அதிகமாக இருக்கப்போகின்றது. ஏனெனில் எமது மண் பரி போய்க்கொண்டிருக்கின்றது இன்றைக்கு இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் எவருக்கும் மண் மீதும் மக்கள் மீதும் அக்கறையோ கவலையோ இல்லை ஆகவேதான் எம் இனத்திற்காக ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள் நீங்கள் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை தருவீர்களா இருந்தால் இந்த மண்ணையும் மக்களையும் நேர்மையாகவும் விசுவாசமாகவும், உண்மையாகவும் பாதுகாப்போம் பாதுகாப்பதோடு எம் மக்களை சொந்தக்காலில் நிற்கின்ற ஒரு அபிவிருத்தியையும், நீண்டகால அபிவிருத்தியிணையும், புலம்பெயர் தமிழர்களின் நிதி பங்களிப்புடன் தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர் யுவுதிகளுக்கான வேலை வாய்ப்பினையும் பெற்றுக்கொடுப்போம்.
எங்களாலேயும் மக்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க முடியும் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்று கொடுக்க முடியும் .இன்று இனப்படுகொலைக்கு நீதி கேட்கின்ற ஒரே ஒரு தரப்பும் நாங்கள்தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று இனப்படுகொலைக்கு நீதி கேட்பவர்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கான குரல் கொடுப்பவரும் நாங்கள்தான்.
மற்றும் இராணுவத்திடம் இருந்து காணி விடுவிப்புகளுக்காக குரல் கொடுப்பவர்களும் நாங்கள்தான். ஆகவேதான் எங்களுக்கு ஒரே ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள் என உருக்கமாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுபாஷ் அவர்கள்.