தென்மராட்சி – வரணி பகுதியில் நேற்று (29) புதன்கிழமை மாலை டிப்பருடன் உந்துருளி மோதிய விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வரணியைச் சேர்ந்த பிரான்சிஸ் சினேஸ் (வயது-26) என்பவரே உயிரிழந்துள்ளார். யோகேந்திரன் கோகுலன் (வயது-26) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டிப்பரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.