மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை ஜெயந்தி ஆயா குளத்தில் தாமரைப்பூ பறிக்க சென்ற ஒருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற நிலையில் மற்றுமொருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருப்பெருந்துறை 5ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராசா சத்தியா என்பவரே இவ்வாறு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காணாமல்போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.