திருகோணமலையில் கடும் காற்றுடன் மழை: வேளாண்மை பாதிப்பு!

0
175

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பகுதியில் கரையான் பிலவு, மற்றும் ஐயாத்தை போன்ற விவசாய சம்மேளனத்தின் கீழ்  செய்கை பண்ணப்பட்ட  சிறுபோக வேளாண்மை   அறுவடைக்குத்  தயாரான நிலையில் கடும் காற்றினாலும் தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாகவும் 1200  இற்கும் மேற்பட்ட  ஏக்கர் அளவு  நீரில் மூழ்கிய நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் கடந்த இரண்டு தினங்கள் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது.

இதில் கரையான் பிலவு விவசாய சம்மேளனத்தின் கீழ் 650 ஏக்கரும், ஐயாத்தை விவசாய சம்மேளனத்தின் கீழ் 450 ஏக்கரும் சிறுபோகத்திற்கான வேளாண்மை செய்கை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று  முன்தினம் (27) அடம்படிப் பேட்டை விவசாய சம்மேளனத்தின் கீழ் உள்ள சுமார்  250 ஏக்கர் வேளாண்மை  அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட விவசாய நிலங்களை விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று முன்தினம் பார்வையிட்டுள்ளதுடன் நேற்றுக்  காலையும் ஏனைய பகுதிகளை பார்வையிடுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கரையான் பிலவு விவசாய சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here