பிரான்சில் யாழ்.இளைஞர் வீட்டில் சடலமாக மீட்பு:கொலை எனச் சந்தேகம்!

0
974

பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (சுதன்) என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 43 வயதான இவர் தனிமையில் வசித்துவந்ததாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

இவரது சடலம் அவரது அவரது வீட்டில் இரத்த வெள்ளத்தில் கடந்த வியாழக்கிழமை காணப்பட்டது. தலை, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக இரத்தப் பெருக்கினால் இவர் மரணமடைந்திருக்கின்றார்.

இது தொடர்பில் தெரியவந்துள்ளதாவது,

வீட்டு வாடகை தொடர்பில் வீட்டு உரிமையாளருடன் இவருக்கு புதன்கிழமை பிரச்சினை ஏற்பட்டது. அதனையடுத்து இவர் வீட்டு உரிமையாளரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அவரது உடமைகளும் வெளியே வீசப்பட்டன.

இதனால், வீதியில் நின்ற இவரைப் பொறுப்பேற்ற பிரெஞ்சுக் காவல்துறை வைத்தியசாலையில் அனுமதித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இவரது சடலம் வியாழக்கிழமை அவரது வீட்டில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாக வீட்டு உரிமையாளர் மீண்டும் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இவரது தலை, முகம், கழுத்துப் பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டன.

புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இவர், வியாழக்கிழமை எவ்வாறு மீண்டும் வீட்டுக்குச் சென்றார் என்பது தெரியவில்லை. ஏனெனெலில் இவரது வீடு உரிமையாளரால் பூட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு உரிமையாளரின் நண்பர்கள் சிலரால் இவர் தாக்கப்பட்டே முதலில் புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இவரது நெருங்கிய உறவினர்கள் எவரும் பிரான்ஸில் இல்லை எனவும், இவரது மனைவி இலங்கையில் வசிப்பதாகவும், கொல்லப்பட்டஜெயசுதனின் நண்பர்கள் தெரிவித்தனர். இவரது சடலம் தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணத்தில் காவல்துறையினர் குழப்பமடைந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(தகவல்:இணையம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here