பிரான்சின் நெவர் நகரத்தில் கடந்த (23/07/2020) வியாழக்கிழமை 1983 யூலை தமிழின அழிப்பின் 37 வது ஆண்டுகள் நீங்காத நினைவேந்தல் இடம்பெற்றது. மாலை 2.00 மணியளவில் நெவர் தமிழ்ச் சங்கத்துடன் தமிழ்ச்சோலையும் அப்பகுதி பங்கு அருட்தந்தையும் இணைந்து நினைவு கூர்ந்துள்ளனர்.
இந் நிகழ்வில் நினைவுச்சுடரினை திரு. மனுவல் இன்னாசியார் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அகவணக்கத்தைத்தொடர்ந்து, அந்நிகழ்வில் கலந்து கொண்ட அருட்தந்தை,சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் தமிழ்ச்சோலை மாணவர்கள் என ஒவ்வொருவராக கறுப்பு யூலை நிழற் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன் சுடரினையும் ஏற்றி வைத்தனர்.
பின்பு யூலை இன அழிப்புப் போர் பற்றி திருமதி ரஞ்சினி அவர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.அடுத்து சங்க செயலாளர் திருமதி றொசாறி அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். இறுதியாக ” தமிழரின் தாகம்,தமிழீழத் தாயகம் ” என்ற மந்திரத்துடன் இந் நிகழ்வு மாலை 3.45 மணியளவில் நிறைவுற்றது.
(எரிமலையின் செய்திப் பிரிவு)
.