கடும் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் நல்லூர்க் கந்தன் ஆலயப் பெருந் திருவிழா இன்று 25.07.2020 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.
கோவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்தவாறு அடியார்கள் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது.
புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் தொலைக் காட்சி மற்றும் இணைய வலைஅமைப்பினூடாக நேரலையாகக் கொடியேற்ற நிகழ்வைக் கண்டு களித்தனர்.
(எரிமலையின் செய்திப் பிரிவு)