பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்கோஷி, பொது முடக்க காலத்தில் எழுதிய ‘புயல்களின் காலங்கள்’ (“Le Temps des tempêtes”) என்னும் தனது நூலை வெள்ளியன்று (இன்று) வெளியிடவுள்ளார்.
இத்தகவலை தனது ருவீற்றர் தளத்தில் அவரே அறிவித்திருக்கிறார்.
ஐந்து ஆண்டுகள் நாட்டின் அதிபராகக் கடந்து வந்த அதிகாரம் மிக்க காலப்பகுதியையும் (2007-2012) அதன் பின்னர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் இந்நூலில் அவர் பதிவு செய்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படு கிறது.
கொரோனா பொது முடக்க காலப்பகுதியில் Cap Nègre இல் உள்ள தனது வசிப்பிடத்தில் தினசரி எட்டு மணிநேரங்களை செலவிட்டு 524 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அவர் எழுதி முடித்துள்ளார்.
இதற்கு முன்னர் அவர் எழுதி வெளியிட்ட “Passions” என்ற அவரது சுயசரிதை புத்தகம் மூன்று லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
23-07-2020
வியாழக்கிழமை.
குமாரதாஸன்.